மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட உதயகுடி உயர் அழுத்த மின்பாதையில் சேதமடைந்து பழுதுதான மின் கம்பங்கள் மாற்றும் பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அ.கச்சான், தவளைக்குளம், உதயகுடி, நகரம், அரியாங் கோட்டை, வாதவனேரி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று உதவி செயற் பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்தார்.

வீரசோழன் மின்பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை உடப்பன்குளம், சின்ன உடப்பங்குளம், பெரிய உடப்பன்குளம், வளைய பூக்குளம், மண்டல மாணிக்கம், எழுவனூர், போத்தநதி, பெருமாள் தேவன்பட்டி ஆகிய பகுதி மற்றும் அபிராமம் மின்பகுதியில் மின் பரா மரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று மற்றும் வருகிற 11-ந்தேதி,14-ந்தேதி அபிராமம் நகர், அகத்தாயிருப்பு, நத்தம் முத்தாதிபுரம், அச்சங்குளம், விரதக்குளம், நரியன் சுப்பு ராயபுரம் மற்றும் ஹச்.டி. மின் இணைப்புகள் அச்சங் குளம் ஆர்.டி.சி.சி.மில், சிவபழனி சேம்பர், சுகன்யா சேம்பர், மன்னன்மில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கமுதி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் விஜயன் தெரிவித்தார்.


Next Story