கூத்தன்குழி பகுதியில் 23-ந் தேதி மின்தடை


கூத்தன்குழி பகுதியில் 23-ந் தேதி மின்தடை
x

கூத்தன்குழி பகுதியில் 23-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட விஜயாபதி துணை மின் நிலையத்தில் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் முருகானந்தபுரம், கூத்தன்குழி, உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினார்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.


Next Story