2 மணி நேரம் மின் தடை


2 மணி நேரம் மின் தடை
x

2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி நகரில் நேற்று மாலை 4.30 மணி அளவில் திடீரென மின் தடை ஏற்பட்டது. நேற்று முழுவதும் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருளாக‌ காணப்பட்ட‌ நிலையில்‌ மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். மாலை 6 மணிக்கு மேலும் மின் ்தடை தொடர்ந்ததால் கடைவீதிக்கு வந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர். மாலை 6.30 மணி அளவில் தான் மீண்டும் மின்சாரம் வந்தது. இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக ‌அறிவிப்பு‌ வெளியான நிலையில் நேற்று மாலை 2 மணிநேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story