நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் இடையமேலூர் பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை, காளையார்கோவில் மற்றும் இடையமேலூர் பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

சிவகங்கை துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராம் நகர், லட்சுமண்நகர், பொதிகை நகர், முத்துசாமி நகர், ராமசாமி நகர், கொட்டகுடி ரோடு, கொட்டகுடி தெரு, கோகுலஹால் தெரு, காந்தி வீதி, சிவன் கோவில் பகுதி, கோட்டை முனியாண்டி கோவில், சரோஜினி தெரு, உடையார் சேர்வை ஊருணி, மணிரங்கபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதேபோல் காளையார் கோவில் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொல்லங்குடி, கல்லத்தி, கருமந்தகுடி, அதப்படக்கி, சாத்தரசன் கோட்டை, செம்பனூர், பெரிய கண்ணனூர், மல்லல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மின்சாரம் நிறுத்தம்

இடையமேலூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை டி.எம். காலனி, கண்டாங்கி பட்டி, வாகுளத்துப்பட்டி, காரமடை குமாரப்பட்டி தமராக்கி கொத்தங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.


Next Story