பொன்மேனி, சுப்பிரமணியபுரம் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்


பொன்மேனி, சுப்பிரமணியபுரம் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக சுப்பிரமணியபுரம், பொன்மேனி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை

மதுரை,

பராமரிப்பு பணிகள் காரணமாக சுப்பிரமணியபுரம், பொன்மேனி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

மதுரை நரசிங்கம்பட்டி மற்றும் மேலூர் துணை மின்நிலையங்களில் உயர்மின் அழுத்த பாதைகளில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அ.வல்லாளப்பட்டி, செட்டியார்பட்டி, அரிட்டாபட்டி, வினோபா காலனி, சண்முகநாதபுரம், அரசப்பன்பட்டி, சாம்பிராணிப்பட்டி, கிடாரிப்பட்டி, ஆயத்தம்பட்டி, மாங்குளம், மீனாட்சிபுரம், பாறைமுறையான்பட்டி, வெள்ளரிப்பட்டி, பொருசுபட்டி, அரும்பனூர், புதுப்பட்டி, எம்.ஆர்.எம்., கொடிக்குளம், மலையாண்டிபுரம், கண்மாய்பட்டி, மேலவளவு, ஆலம்பட்டி, அன்பில்நகர், பட்டூர், கேசம்பட்டி, சாணிப்பட்டி, சேக்கிபட்டி, சென்னகரம்பட்டி, புலிப்பட்டி, அம்மச்சியாபுரம், மேலவளவு காலனி, அக்ரகாரம், எட்டிமங்கலம், பதினெட்டாங்குடி, கொட்டக்குடி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி துணை மின்நிலையத்தில் குலசேகரன்கோட்டை பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதனால் பூச்சம்பட்டி, கட்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, பாலதண்டாயுதபாணி கோவில் பகுதி, சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்

மதுரை மேற்கு கோட்ட அரசரடி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே சொக்கலிங்க நகா் 1 முதல் 9 தெரு வரை, டி.எஸ்.பி. நகா், பொன்மேனி ெமயின் ரோடு 1,2- வது தெரு, சக்திவேலம்மாள் தெரு, பாா்த்தசாரதி தெரு, ஜவகா் மெயின்ரோடு 1 முதல் 5 தெரு வரை, திருவள்ளுவா் தெரு, கண்ணதாசன்தெரு, சுப்பிரமணியபிள்ளை தெரு, நாவலா் 1 முதல் 3- வது தெரு வரை, பைபாஸ்ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளா் பழனி தொிவித்துள்ளாா்.

மேலும் சுப்பிரமணியபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் சுப்பிரமணியுரம், எம்.கே.புரம், நந்தவனம் பகுதிகள், டி.பி.கே.ரோடு, ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்பிரமணியபுரம் மார்க்கெட் பகுதி, வி.வி.கிரி சாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை வினியோகம் இருக்காது.

மாகாளிபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து மற்றும் காளியம்மள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story