வேலாயுதம்பாளையம், புகழூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


வேலாயுதம்பாளையம், புகழூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

வேலாயுதம்பாளையம், புகழூர் பகுதிகளில் இன்று (புதன்கிழமை)மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

காணியாளம்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட ஜெகதாபி பீடர், லந்தக்கோட்டை பீடர் ஆகிய பீடர்களில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராஜலிங்கபுரம், செல்லாண்டிபுரம், கள்ளபொம்மன்பட்டி, தெற்கு மாணிக்கபுரம், நத்தப்பட்டி, வடக்கு மாணிக்கபுரம், சுக்காம்பட்டிபுதூர், வெள்ளமடைப்பட்டி, அய்யம்பாளையம், பாலப்பட்டி, பொம்மனத்துப்பட்டி, நன்னிபாறை, காணிகளத்தூர், மஞ்சநாயக்கன்பட்டி, ராசான்கோவிலூர், லந்தக்கோட்டை, கன்னிமார்பாளையம், கரும்புளிப்பட்டி, முத்தக்காப்பட்டி, ஜெகதாபி தெற்கு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட வெஞ்சமாங்கூடலூர் பீடர், ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட காங்கேயம்பாளையம் பீடர், ராஜபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட சின்னதாராபுரம் பீடர், புகழூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ஆட்டோ எஸ்.எஸ்.பீடர், அரவக்குறிச்சி துணை மின்நிலையத்திற்குட்பட்ட அரவக்குறிச்சி பீடர், தாளப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட தொழிற்சாலை பீடர், பள்ளப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட இடையகோட்டை பீடர் ஆகிய பீடர்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பெத்தான்கோட்டை, கேத்தம்பட்டி, ராசாப்பட்டி, கொக்காட்டுபட்டி, வெஞ்சமாங்குடலூர், பாரப்பட்டி, சின்னகரியாம்பட்டி, பெரியகரியாம்பட்டி, ஒத்தையூர், ராவுத்தம்பட்டி, சென்பகணம், வரிக்கப்பட்டி, மாதுரெட்டிப்பட்டி, நந்தனூர், பரப்புத்துறை, நாச்சிகாளையம்புதூர், லட்சுமிபுரம், காங்கேயம்பாளையம், வேலாயுதம்பாளையம், சாலிபாளையம்.

டி.வெங்கிடாபுரம், சின்னதாராபுரம், அணைபுதூர், ரெங்கபாளையம், காளிப்பாளையம், புகழூர், ஆறுரோடு, காக்காவாடி, ஆட்டம்பரப்பு, பூலான்வலசு, சாந்தப்பாடி, கோவிலூர், வடுகப்பட்டி, மொடக்கூர் கிழக்கு கொடிகாரன்வலசு, பி.ஜி.புதூர், பாறையூர், அரவக்குறிச்சி டவுன், சின்னகவுண்டனூர் கொத்தப்பாளையம், எட்டியகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.


Next Story