வடகாடு, ஆலங்குடியில் நாளை மின்நிறுத்தம்


வடகாடு, ஆலங்குடியில் நாளை மின்நிறுத்தம்
x

வடகாடு, ஆலங்குடியில் நாளை (திங்கட்கிழமை)மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், ஆலங்காடு, சூரன்விடுதி, வெள்ளாகுளம், பள்ளத்திவிடுதி, அரையப்பட்டி, பசுவயல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என வடகாடு மின் உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

ஆலங்குடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, ஆலங்காடு, வெட்டன்விடுதி, அரசடிப்பட்டி, மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வம்பன், கே.ராசியமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஆலங்குடி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story