காளையார்கோவில், திருப்புவனம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


காளையார்கோவில், திருப்புவனம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:47 PM GMT)

காளையார்கோவில், திருப்புவனம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில், திருப்புவனம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காளையார்கோவில், சொர்ணவள்ளி நகர், பள்ளிதம்மம், புலியடிதம்மம், சருகனி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடி, கருங்காளி, கருமந்தகுடி, பெரியகண்ணனூர் ஒய்யவந்தான், நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் நிறுத்தம்

அதேபோல திருப்புவனம் அடுத்த நெல்முடிகரையில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்புவனம், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், கீழச்சொரிக்குளம், மேலச்சொரிக்குளம், முதுவந்திடல், டி.பாப்பாங்குளம், பிரமனூர், பழையனூர், வயல்சேரி, கீழராங்கியம், மேலராங்கியம், அல்லிநகரம், கலியாந்தூர், மாங்குடி, அம்பலத்தடி, மேலவெள்ளூர், பொட்டப்பாளையம், பாட்டம், கொந்தகை, கீழடி, மணலூர், தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) உலகப்பன் தெரிவித்துள்ளார்.


Next Story