தரங்கம்பாடியில் மின் இணைப்பு துண்டிப்பு
தரங்கம்பாடியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மயிலாடுதுறை
பொறையாறு:
சந்திரப்பாடி மற்றும் தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. தரங்கம்பாடி கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.பலத்த காற்றின் வீசியதால் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பிகள் சேதம் அடைந்தது. மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தரங்கம்பாடியில் நேற்று காலை முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
===
Related Tags :
Next Story