இளையான்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

இளையான்குடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இளையான்குடி
இளையான்குடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை மானாமதுரை கோட்ட செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
இதேபோல் திருப்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான திருப்பத்தூர், கருப்பூர், தென்கரை, பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை, மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.






