நாளை மறுநாளும், 20-ந் தேதியும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மறுநாளும், 20-ந் தேதியும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 1:14 AM GMT)
தர்மபுரி

மொரப்பூர்

கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மொரப்பூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிபட்டி, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி ஆகிய பகுதிகளிலும், இதனை சுற்றியுள்ள இதர பகுதிகளுக்கும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலக்கோடு வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாதந்திர பராமரிப்பு பணிக்காக பாலக்கோடு, சுகர்மில், எர்ரன அள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகிரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


Next Story