மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்தடை
மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கரூர்
புகழூர் துணை மின்நிலையத்தில் இருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின்பாதையில் நாணப்பரப்பு பகுதியில் மின்கம்பியில் ஜம்பர் கட் ஆகி அறுந்து கீழே விழுந்து விட்டது. இதுகுறித்து உடனடியாக புகழூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்கம்பி அறுந்து விழும்போது யாரும் அந்த வழியாக செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story