ஆம்பூர், சோமலாபுரம் பகுதியில் மின்நிறுத்தம்


ஆம்பூர், சோமலாபுரம் பகுதியில் மின்நிறுத்தம்
x

ஆம்பூர், சோமலாபுரம் பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பத்தூர்

ஆம்பூர், சோமலாபுரம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய அவசர மின்சாதன பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. இதன்காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆம்பூர், சோமலாபுரம், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ராலகொத்தூர், ஏ.எம். பள்ளி, ரெட்டித்தோப்பு, தார்வழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை பள்ளிகொண்டா கோட்ட செயற்பொறியாளர் எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story