திருச்சி பீமநகர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை


திருச்சி பீமநகர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
x

திருச்சி பீமநகர் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது

திருச்சி

திருச்சி நகரியம் கோட்டத்துக்கு உட்பட்ட கண்டோன்மெண்ட் பிரிவுக்கு உட்பட்ட பீமநகர் பகுதியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, கண்டி தெரு, பென்சனர் தெரு, ஆனைகட்டி மைதானம், மேட்டுதெரு, யாதவதெரு, அல்திவான் பள்ளிவாசல், ஹாஜியாதெரு மற்றும் கண்ணன் ரைஸ்மில் ஆகிய பகுதிகளில் உயர் அழுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளர் பா.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


Next Story