கூடுவாஞ்சேரி, பொத்தேரி பகுதியில் நாளை மின்தடை


கூடுவாஞ்சேரி, பொத்தேரி பகுதியில் நாளை மின்தடை
x

கூடுவாஞ்சேரி, பொத்தேரி பகுதியில் துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு

பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மறைமலைநகர் கோட்டத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, தைலாவரம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் கேளம்பாக்கம் மார்கெட் பகுதி, சாத்தாங்குப்பம், இளவந்தாங்கல், வீராணம் சாலை, மாரியம்மன் கோவில் தெரு, நெல்லிக்குப்பம், அம்மாப்பேட்டை, கல்வாய், கண்டிகை, கீழ்கல்வாய், கொட்டமேடு, மேலையூர், சிறுங்குன்றம், கொண்டங்கி, மாம்பாக்கம் கூட்ரோடு, வேங்கடமங்கலம் ஒரு பகுதி,பொத்தேரி வட்டாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு உட்பட்ட பிரியா நகர், அருள் நகர் ஒரு பகுதி, ஜி.எஸ்.டி. சாலை (மேற்கு பகுதி), மீனாட்சி நகர், என்.ஜி.ஒ. காலனி, பாண்டியன் நகர், கூடுவாஞ்சேரி ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பெரியார் ராமசாமி சாலை உள்பட சுற்றுப்புற பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


Next Story