இச்சிபுத்தூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
இச்சிபுத்தூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ராணிப்பேட்டை
அரக்கோணம்
இச்சிபுத்தூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அரக்கோணம் தாலுகா இச்சிபுத்தூர் மற்றும் சாலை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகைபோளூர், வாணியம் பேட்டை, நாகாலம்மன் நகர், வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மற்றும் சாலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட தண்டலம், மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான்பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட், குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இத்தகவலை அரக்கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story