இளையான்குடி, மறவமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
இளையான்குடி, மறவமங்கலம் ஆகிய பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை
இளையான்குடி
இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மானாமதுரை கோட்ட செயற்ப்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் காளையார்கோவில் அடுத்த மறவமங்கலம் துணை மின் நிலையத்தில் முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மறவமங்கலம், பால்குளம், குண்டாக்குடை, பளுவூர், அஞ்சாம்பட்டி, வலையம்பட்டி, பாஸ்டின் நகர் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது என காளையார்கோவில் உதவி மின் செயற்பொறியாளர் அன்புநாதன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story