காரைக்குடி பகுதியில் 18-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்


காரைக்குடி பகுதியில் 18-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் 18-ந்தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

சிவகங்கை

காரைக்குடி நகர துணை மின் நிலையத்தில் புதிய திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் நிறுவுவது தொடர்பான பராமரிப்பு பணிகள் வருகிற 18-ந்தேதி, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. எனவே 18-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணைமின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 19-ந்தேதி அன்று மாற்று துணை மின் நிலையத்திலிருந்து இந்த துணை மின்நிலையத்துக்கு மின்வினியோகம் செய்யப்படுவதால் அவ்வப்போது சிறு, சிறு மின்தடை ஏற்படும். இதற்கு மின்நுகர்வோர்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மின்செயற்ெபாறியாளர் தெரிவித்து உள்ளார்.


Next Story