காரைக்குடி, காளையார்கோவிலில் மின்சாரம் நிறுத்தம்


காரைக்குடி, காளையார்கோவிலில் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக காரைக்குடி, காளையார்கோவிலில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

பராமரிப்பு பணி காரணமாக காரைக்குடி, காளையார்கோவிலில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

காரைக்குடி துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகளான பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலைக்கோட்டை, மன்னர் நகர், ஆறுமுக நகர், பாரிநகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.

மின்சாரம் நிறுத்தம்

காளையார்கோவில் நகர் பகுதியான மதுரை-தொண்டி சாலையில் தற்போது சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பராமரிப்பு பணி காரணமாக எஸ்.எஸ்.நகர், மூர்த்தி நகர், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, போலீஸ் நிலையம், பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரையும், நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை காளையார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அன்புநாதன் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை-தொண்டி சாலையில் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அப்பகுதி அருகில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.


Next Story