லால்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்


லால்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

லால்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

லால்குடி பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் லால்குடி அரசு பொது மருத்துவமனை, மணக்கால் அக்ரஹாரம், மணக்கால் கிழக்கு, நன்னிமங்கலம், மும்முடி சோழமங்களம் விவசாய பகுதிகள், பூவாளூர், பெருவளநல்லூர், வெள்ளனூர், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம், அன்பில், கொப்பாவளி, ஆதிகுடி, நடராஜபுரம், மேட்டாங்காடு, படுகை, மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், வழுதியூர், சாத்தமங்கலம், ஆனந்திமேடு, காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் (பொறுப்பு) கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story