மதகுபட்டி, அரசனூர் பகுதிகளில் நாளை மின்தடை


மதகுபட்டி, அரசனூர் பகுதிகளில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 5:05 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக மதகுபட்டி, அரசனூர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது

சிவகங்கை

சிவகங்கை

பராமரிப்பு பணி காரணமாக மதகுபட்டி, அரசனூர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

மதகுபட்டி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவாகோட்டை, சிங்கினிபட்டி, அம்மாச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமாநேரி, திருமலை, கல்லராதினப்பட்டி, வீரபட்டி, கீழபூங்குடி, பிரவலூர், பேரணிபட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலு கோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தார்பட்டி, ஆவத்தாரன்பட்டி, கணேசபுரம், ஏரியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இத்தகவலை சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

அரசனூர்

அரசனூர் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தானேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர், பில்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது இத்தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

அனுமந்தகுடி

தேவகோட்டை துணை கோட்டத்திற்கு உட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற 12-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே கப்பலூர், அனுமந்தகுடி, தேரளப்பூர், மு.சிறுவனூர், நாரணமங்களம், சாத்தனக்கோட்டை, கண்டியூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களூர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 12-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை தேவகோட்டை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story