பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
பண்ருட்டி,
பண்ருட்டி பூங்குணம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, கருக்கை, விசூர், மணலூர், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப்பாக்கம், தட்டாம்பாளையம், புதுப்பேட்டை, ராசாப்பாளையம், பக்கிரிப்பாளையம், ஏரிப்பாளையம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மாளிகைமேடு, பண்டரக்கோட்டை, கொண்டாரெட்டிப்பாளையம், வ.ஊ.சி.நகர், ஆர்.எஸ்.மணி நகர், பாரதி நகர், ரெயில்வே காலனி, சாமியார் தர்கா, புதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறிஞ்சிப்பாடி துணைமின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சிப்பாடி, வேலவிநாயகர்குப்பம், புதுக்குப்பம், கஞ்சமநாதன்பேட்டை, விருப்பாட்சி, சித்தாலிக்குப்பம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை குறிஞ்சிப்பாடி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.