புதுக்கோட்டையில் இன்று மின்நிறுத்தம்
புதுக்கோட்டையில் இன்று மின்நிறுத்தப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சாந்தநாதபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சார்லஸ் நகர், கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், சின்னப்பா நகர், சேங்கை தோப்பு, அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், ஆலங்குடி ரோடு, முருகன் காலனி, கலீப்நகர், மருப்பினிரோடு, கோல்டன் நகர், டைமண்ட் நகர், திருவப்பூர், திலகர் திடல், அம்பாள்புரம், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று புதுக்கோட்டை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story