சிவகாசியில் 26-ந் தேதி மின்தடை


சிவகாசியில் 26-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவகாசியில் 26-ந் தேதி மின்தடை ெசய்யப்படுகிறது.

விருதுநகர்

சிவகாசி,

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவகாசியில் 26-ந் தேதி மின்தடை ெசய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

சிவகாசி கோட்டத்தில் உள்ள பாறைப்பட்டி, சிவகாசி, நாரணாபுரம் ஆகிய துணைமின்நிலையங்களில் 26-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதை தொடர்ந்து இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பாறைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், பேருந்து நிலையம், நாரணாபுரம் ரோடு, சிவகாசி அர்பன், காரனேசன் காலனி, நெல்கடைமுக்கு, அஞ்சல் அலுவலகம், பத்திரபதிவு அலுவலகம், பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணாகாலனி, நாரணாபுரம், பள்ளபட்டி, லிங்கபுரம் காலனி, ராஜிவ் காந்திநகர், கண்ணாநகர், அம்மன் நகர், காமராஜபுரம், 56 வீட்டுகாலனி, ஐஸ்வர்யாநகர், அரசன் நகர், சீனிவாசநகர் பகுதியில் மின் வினிேயாகம் நிறுத்தப்படும்.

வினிேயாகம்

ேமலும் பர்மாகாலனி, போஸ் காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, மீனாட்சி காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இ்ந்த தகவலை சிவகாசி மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story