சோலைசேரி பகுதியில் இன்று மின்தடை


சோலைசேரி பகுதியில் இன்று மின்தடை
x

சிறப்பு பராமரிப்பு பணிக்காக சோலைசேரி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

சிறப்பு பராமரிப்பு பணிக்காக சோலைசேரி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணி

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள சோலைசேரி பீடர், அர்பன் வாட்டர் ஓர்க்ஸ் பீடர், கொத்தங்குளம் பீடர், தெற்கு இண்டஸ்ட்ரியல் பீடர், கொங்கன் குளம் பீடர் ஆகிய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பட்டி, சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், சுந்தர நாச்சியாபுரம், தென்காசி ரோடு, பச்சை மடம், காந்தி கலை மன்றம், பி. எஸ்.கே.பார்க், சொக்கர் கோவில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மின்தடை

அதேபோல சிங்கராஜா கோட்டை, சின்னையா ராஜா தெரு, ஆண்டத்தம்மன் கோவில் தெரு, ராம்கோ என்ஜினீரியங் கல்லூரி, அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோவில், சர்வோதயா காலனி, பண்ணை ரோடு, மம்சாபுரம் விளக்கு, கொங்கன் குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. ராமன்பட்டி, மேல கோடாங்கி பட்டி, பி.திருவேங்கடபுரம், நதிக்குடி, ஆத்தூர், சுப்ரமணியபுரம், மம்சாபுரம், இடையங்குளம், ரெங்க சமுத்திரப்பட்டி, கான்சாபுரம், பூசாரிபட்டி, காக்கிவாடம்பட்டி, தேசிகாபுரம், சோழபுரம், முதுகுடி, வண்டி காளியம்மன் கோவில் ஆகிய பகுதிகளிலும் இன்று மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.


Next Story