சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x

சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை


சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சுப்பிரமணியபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தெற்கு வெளிவீதி, பவர்ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்கார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே.ரோடு ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜிரோடு, மேலமாசி வீதி ஒரு பகுதி, இன்மையில் நன்மை தருவார் கோவில் தெரு, மேலவடம்போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு, எம்.கே.புரம், நந்தவனம் பகுதிகள், ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்பிரமணியபுரம் மார்க்கெட், வி.வி.சாலை, தெற்காவணிமூலவீதி ஒரு பகுதி, தெற்குமாசி வீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டி வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோவில் தெரு ஒரு பகுதி, கிரைம் பிரான்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்கார தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின்சாரம் நிறுத்தம்

இதேபோல் மாகாளிபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மகால் 1 முதல் 7 தெருக்கள், பால்மால் குறுக்கு தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளிஅம்மன் கோவில் தெரு, மேல தோப்பு பகுதிகள், புதுமாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புதுமாகாளிபட்டி ரோடு வடக்கு பகுதி, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோவில் பகுதி, பிள்ளையார்பாளையம் கிழக்கு பகுதி, மேற்கு பகுதி, செட்டியூரணி, எப்.எப்.ரோடு, காஜா தெரு, தெற்கு வெளிவீதி, பாம்பன்ரோடு, சண்முகமணி நாடார் சந்து, தெற்குமாசி வீதி சில பகுதிகள், மஞ்சணக்கார தெரு சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண் பகுதிகள், நவபாத்கானா தெரு, பத்து தூண் பகுதிகள், காளவாசல், கீரைத்துறை, கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story