தஞ்சையில் நாளை மின்தடை
தஞ்சையில் நாளை மின்தடை
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கீழவாசல் மின்பாதையில் உள்ள பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ஓட்டக்கார தெரு, பெரிய குரும்பர் தெரு, சாமியாபிள்ளை தெரு, சுண்ணாம்புகார தெரு, பெரிய அரிசிக்கார தெரு, ஜெபமாலை மாதாகோவில் தெரு, எஸ்.என்.எம்.நகர், குறிச்சி புதுத்தெரு, டபீர்குளம் ரோடு, தாஸ்தப்பா நாயக்கன் தெரு, குறிஞ்சி சுப்பிரமணியர் கோவில்தெரு, திரவுபதியம்மன்கோவில் தெரு, அம்மா தோட்டம், காசிம் நகர், ரிஜிஸ்டர் ஆபீஸ் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் மின்தடை குறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.