திருவண்ணாமலையில் இன்று மின்நிறுத்தம்
திருவண்ணாமலையில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மேற்கு மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலைய பாதைகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் இடுக்கு பிள்ளையார் கோவில் தெரு, சிப்காட் தொழில்பேட்டை, குபேரநகர், நேதாஜி நகர், குபேர பெருமாள் கோவில் பகுதி, வசந்தம் நகர், ஜெயம்பீம் நகர், எழில் நகர், காஞ்சி ரோடு மற்றும் நேரு நகர் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற் பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story