வலங்கைமான் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
வலங்கைமான் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் துணை மின் நிலையத்திற்கு மின் பகிர்மானம் செய்து வரும் கும்பகோணம் சாக்கோட்டை மின் பகிர்மான நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அவசர கால சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் வலங்கைமான் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென் குவளைவேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story