வயலூர், குழுமணி, எடமலைப்பட்டிபுதூர் பகுதிகளில் நாளை மின்தடை


வயலூர், குழுமணி, எடமலைப்பட்டிபுதூர் பகுதிகளில் நாளை மின்தடை
x

வயலூர், குழுமணி, எடமலைப்பட்டிபுதூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி

திருச்சி அதவத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வயலூர் மின்பாதை, சிறுகமணி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பழங்காவேரி மின்பாதை, அம்மா பேட்டை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஆலம்பட்டி மின்பாதை ஆகியவற்றில் நாளை (புதன்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, சோமரசம்பேட்டை பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட வயலூர், முள்ளிக்கருப்பூர், பேரூர், குழுமணி, சின்னக்கருப்பூர், சுப்புராயன்பட்டி, புலிவலம், கோப்பு, அயிலாப்பேட்டை, மேலப்பட்டி, பட்டையார்களம், திருப்பராய்துறை பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட வள்ளுவர்நகர், காவல்காரபாளையம், ஜே.ஜே.நகர், இந்திராசுந்தர்நகர், காமநாயக்கன்பாளையம், சக்திநகர், வைகோநகர், சோழவந்தான்தோப்பு, திருமுருகன்நகர், திருச்சி கிராமியம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட வெள்ளிவாடி, ஆலம்பட்டிபுதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதேபோல் எடமலைப்பட்டி புதூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டிபுதூர், ராஜீவ்காந்திநகர், கங்கை நகர், கிருஷ்ணாபுரம் மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.


Next Story