வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி மன்னார்புரம் இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், கீழகுமரேசபுரம், தமிழ்நகர், பெல் டவுன்ஷிப்பில் சி மற்றும் டி செக்டார்களில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல்நகர், வ.உ.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.