விராலிமலை, மாத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை


விராலிமலை, மாத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை
x

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக விராலிமலை, மாத்தூர் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின் தடை

விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் விராலிமலை நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கோமங்கலம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, ராஜாளிப்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியப்பட்டி, தேன்கணியூர், கொடும்பாளூர், மாதுராப்பட்டி, ராமக்கவுண்டம்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிப்பட்டி, கோத்திராப்பட்டி, கட்டக்குடி, பாப்பாவயல், முருககோன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாத்தூர், ஆவூர்...

மாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மாத்தூர் டவுன் மற்றும் அதற்குட்பட்ட இண்டஸ்ட்ரியல் பகுதி, குண்டூர் பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், சாமிஊரணிபட்டி, மலையேறி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு, புதுப்பட்டி, செங்களாக்குடி, சீத்தப்பட்டி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி, திருமலைசமுத்திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மாத்தூர் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story