விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை


விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை
x

பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் மின் கோட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இப்பகுதியில் உள்ள சமத்துவபுரம், சின்னப்பரெட்டியபட்டி, பெரியவள்ளி குளம், புதுப்பட்டி, நோபிள் பள்ளி, மத்திய சேனை, உப்புஓடை, விருதுநகர் படேல் ரோடு, சாஸ்திரி நகர், பாண்டியன் நகர், முத்தால் நகர், மல்லாங்கிணறு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

அதேபோல விருதுநகர் கட்டையாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மதியம் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்வினியாகம் நிறுத்தப்படும். இதேபோன்று வில்லிபத்திரி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.



Next Story