வலங்கைமான் பகுதியில் நாளை மின்தடை


வலங்கைமான் பகுதியில் நாளை மின்தடை
x

வலங்கைமான் பகுதியில் நாளை மின்தடை

திருவாரூர்

வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உயர்மின் அழுத்த பாதையில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே வலங்கைமான் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்குபட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழஅமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளைவேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவாரூர் உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story