நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
பொன்னகரம், சின்னாளப்பட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, காப்பிளியபட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலைய பகுதிகள், யாகப்பன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்தார்.
இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த கீழக்கோட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி செட்டியபட்டி, கல்லுப்பட்டி, பூத்தாம்பட்டி, எல்லப்பட்டி, காந்திகிராமம் பகுதிகள், அக் ஷயாநகர், சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, அமலிநகர், முருகம்பட்டி, இந்திராபுரம், பெருமாள்கோவில்பட்டி பகுதிகள், வலையபட்டி, வேளாங்கண்ணிபுரம், விநாயகபுரம், பாத்திமாநகர், சின்னாளப்பட்டி, கீழக்கோட்டை, பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, கோட்டைப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி, திருநகர், ஹைஸ்கூல் பகிர்மானம், நேருஜிநகர், மெயின்பஜார், வடக்கு தெரு, சிறுமலை பழையூர், புதூர், அகஸ்தியார்புரம், தென்மலை ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, சின்னாளப்பட்டி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.