இன்று மின் நிறுத்தம்


இன்று மின் நிறுத்தம்
x

திருநீலக்குடி, புதூர், முருக்கங்குடியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் தெற்கு உபகோட்டம், திருநாகேஸ்வரம் துணை மின்நிலையம் தரம் உயர்த்துவதற்காக முருக்கங்குடி பீடரில் பணிகள் இன்று(திங்ட்கிழமை நடக்கிறது. இதன் காரணமாக முருக்கங்குடி பீடர் வாயிலாக மின்வினியோகம் பெறும் முருக்கங்குடி. ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், மாங்குடி, முதல்கட்டளை, இரண்டாம்கட்டளை. ஏழாம்கட்டளை. புத்தகரம், புதூர், திருநீலக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய கும்பகோணம் தெற்கு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story