இன்று மின்சாரம் நிறுத்தம்
புத்தூர், விளந்திடசமுத்திரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
மயிலாடுதுறை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர், ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து துளசேந்திரபுரம், திருமுல்லைவாசல் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் புத்தூர், சீயாளம், கண்ணங்குளம், தண்டேசநல்லூர், ஆண்டி கோட்டம், விளந்திட சமுத்திரம், ஆர்ப்பாக்கம், காப்பியக்குடி, சேந்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற் பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story