இன்று மின் நிறுத்தம்

வடசேரி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு வட்டம் வடசேரி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி, ஓலையக்குண்ணம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






