இன்று மின்நிறுத்தம்
திருக்குவளை பகுதியில் இன்று மின்நிறுத்தம்
நாகப்பட்டினம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருக்குவளை உதவி செயற்பொறியாளர் ராய்ஸ்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருக்குவளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெரும் மேலப்பிடாகை, வாழக்கரை, மீனம்பநல்லூர், கலத்திடல்கரை, நாட்டிருப்பு, வல்லவிநாயக கோட்டகம், கீழையூர், சோழவித்தியாபுரம், செம்பியன்மகாதேவி, குறிச்சி, காருக்குடி, ஆதமங்கலம், வலிவலம், உத்திரங்குடி, கச்சனம் ஆகிய பகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story