இன்று மின்நிறுத்தம்
அதம்பார், வேலங்குடி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
நன்னிலம்:
மின்வாரிய இயக்குதலும் பராமரித்தலும் பேரளம் உதவி செயற்பொறியாளர் பிரபாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அதம்பார், வேலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அதம்பார் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெரும் மருதவாஞ்சேரி, கடகம் பாடி, பாக சாலை, விலாகம், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், திருவிழிமழலை, அண்ணியூர், ராதாபுரம், புதுக்குடி, பரவாக்கரை, கூத்தனூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் வேலங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நல்லாடை, காலியாக்குடி, திருக்கொட்டாரம், முகந்தனூர், சங்கமங்கலம், நெடுங்குளம், அன்னதானபுரம், பனங்காட்டாங்குடி, பாவட்ட குடி, கடகம், சிறுபுலியூர் ஆகிய பகுதிகளுக்கும் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.