இன்று மின்நிறுத்தம்


இன்று மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

திருவாரூர்


திருவாரூர் மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் துணை மின்நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையம் மற்றும் கப்பல் நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி, மாவூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் அடியக்கமங்கலம், இ.பி.காலனி, சிதம்பரம் நகர், பிலாவடிமூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூர், புதுபத்தூர், நீலப்பாடி, கீழ்வேளுர், கொரடாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story