இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கள்ளிமந்தையம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சந்தனமுத்தையா தெரிவித்தார்.

இதேபோல் பழனி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சாநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

வத்தலக்குண்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, ஜி.தும்மலப்பட்டி, பழைய வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மேத்யூ தெரிவித்துள்ளார்.


Next Story