இன்று மின்சாரம் நிறுத்தம்
குஜிலியம்பாறை, கோபாலபட்டி, வடமதுரை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
குஜிலியம்பாறை அருகே உள்ள வள்ளிபட்டி, சத்திரப்பட்டி மற்றும் சின்னுலுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அம்மாபட்டி, ராமகிரி, மல்லபுரம், குஜிலியம்பாறை, இலுப்பப்பட்டி, புளியம்பட்டி, சி.சி.குவாரி, உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், பள்ளப்பட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைகாரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதாநாயக்கனூர், இடையபட்டி, காளப்பட்டி, பூசாரிபட்டி, திருமக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று குஜிலியம்பாறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இதேபோல் கோபால்பட்டி அருகே உள்ள வே.குரும்பபட்டி துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கோபால்பட்டி, அஞ்சுகுளிபட்டி, மணியகாரன்பட்டி, சில்வார்பட்டி, கோணப்பட்டி, சாணார்பட்டி, ராகாலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெடிப்பட்டி, ஆவிளிபட்டி, முளையூர், சின்னமுளையூர், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, சக்கிலியன்கொடை, ராமராஜபுரம் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதையொட்டி வடமதுரை, புத்தூர், போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மக்குண்டு, சீத்தப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.