இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:30 AM IST (Updated: 24 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தேனி

தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதிய பஸ் நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜிநகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.

1 More update

Next Story