இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

பட்டிவீரன்பட்டி, நிலக்கோட்டை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல்பாளையம், கே.புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலிநாயக்கன்பட்டி, சுட்டிக்காலடிப்பட்டி, அவையம்பட்டி, மணியக்காரன்பட்டி, பங்களாபட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

இதேபோல் அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை மஞ்சள்பரப்பு, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.


Next Story