இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

குமாரபாளையம், வெப்படை பகுதிகளில் இன்று பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

குமாரபாளையம்

குமாரபாளையம் வட்டம் வெப்படை துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வெப்படை, பாதனை, இந்திராநகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், இலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், புதுமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்ன கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம் மற்றும் இளையாம்பாளையம்.

இதேபோல் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, கோட்டைமேடு, வேமன் சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.


Next Story