இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

ராசிபுரத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராசிபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கபட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம் கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story