இன்றும், நாளையும் மின் நிறுத்தம்


இன்றும், நாளையும் மின் நிறுத்தம்
x

பன்னியூர், பாணாவரம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் மின் கோட்டம் வெங்கடாபுரம் உபகோட்டத்தை சேர்ந்த பாணாவரம் துணை மின் நிலையத்தில் பன்னியூர் மின்பாதையில் உள்ள கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடக்கிறது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மங்கலம் காலனி, கீழ்வீராணம், புதூர், ஜி.டி.நல்லூர் மற்றும் பன்னியூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும் பாணாவரம் மின்பாதையில் உள்ள கம்பங்களை மாற்றும் பணி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாணாவரம், ரங்காபுரம், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் மாங்குப்பம் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் உமாசந்திரா தெரிவித்துள்ளார்.


Next Story