அரிமளம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் இன்று மின்தடை


அரிமளம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் இன்று மின்தடை
x

அரிமளம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

இன்று மின் நிறுத்தம்

அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அரிமளம், காமராஜபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், வெட்டுக்காடு, பொந்து புலி, பூனாங்குடி, சிராயன்பட்டி, சத்திரம், கோவில்வாசல், மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூர், கீரணிப்பட்டி, தேனீப்பட்டி, வம்பரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று திருமயம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

கோட்டைப்பட்டினம், மீமிசல்...

கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, மீமிசல், கட்டுமாவடி, அரசர்குளம், வல்லவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி உதவி செயற் பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story