கீழக்கரை, திருஉத்திரகோசமங்கை பகுதிகளில் இன்று மின்தடை


கீழக்கரை, திருஉத்திரகோசமங்கை பகுதிகளில் இன்று மின்தடை
x

பராமரிப்பு பணி காரணமாக கீழக்கரை, திருஉத்திரகோசமங்கை பகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

பராமரிப்பு பணிகள்

கீழக்கரை துணை மின் நிலையம் மற்றும் திருஉத்திரகோசமங்கை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கீழக்கரை பீடர்களுக்கு உட்பட்ட பகுதிகளான வள்ளல் சீதக்காதி சாலை, தெற்கு தெரு, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல்நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம்பஜார், சங்குவெட்டி தெரு, இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழையமீன்மார்க்கெட், பைத்துமால் மற்றும் அலவாய்கரவாடி பீடருக்கு உட்பட்ட பகுதிகளான அலவாய்கரவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல்புதிர், கிழக்குதெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டானி அப்பா பெத்தரி தெரு, ஸ்ரீ நகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

மின்தடை

இதேபோல் சின்ன மாயாகுளம் பீடருக்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மாயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மாயாகுளம், விவேகானந்தபுரம் ஆகிய பகுதிகளும், திருஉத்திரகோசமங்கை பீடருக்கு உட்பட்ட பகுதிகளான பாளையரேந்தல், சின்ன பாளையரேந்தல், பணயங்காள், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், வெள்ளா, எக்ககுடி, நல்லாங்குடி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பதை மின் உதவி பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story